Tuesday, December 31, 2013

2013ன் தொல்லை போம்

தொலைந்து போ 2013றே....!
என்னை நோகடித்தாய் விதியே என்றிருந்தேன்
இதுவரை உன்னை யாராவது...?
புகழ்ந்துரைத்தது போல் ஞாபகமும் இல்லை
'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்பர்
நீயோ உன் முடிவிலும்
இயற்கையின் தோழன் 
நம் ஆழ்வானையும் உன்னோடு அழைத்தாய் என்ன திமிர் உனக்கு? இயற்கையோடும் விளையாட
நமக்காக எதையும் செய்யாத நீ தொலைந்தே போ..!
எமக்கே எமக்காய் வருகிறது '2014'
வாழ்ந்து காட்டுகிறோம்.     

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வரும் ஆண்டில் அனைத்தும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...