Wednesday, August 31, 2011

இன்று ஒரு தகவல் - கற்பனை பாத்திரங்கள்

உலகெங்கும் சில கற்பனை பாத்திரங்கள் அந்தந்த நாட்டில் உலா வருகின்றன. இது கற்பனை என்று தெரிந்தும் கூட இவற்றுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.



எரிந்து சாம்பலான பின்பும் அந்த சாம்பலில் இருந்து உயிர் பெற்று வரும் பீனிக்ஸ் பறவை ஒரு கற்பனை பாத்திரம் தான். இந்த பறவை அன்னம் பாதி, கழுகு பாதி சேர்ந்து செய்த கலவை. தனது வாழ்வின் இறுதியில் கிழப்பருவம் ஏற்படும் போது தானாகவே எரிந்து சாம்பலாகி விடும். பிறகு எறிந்த சாம்பலில் இருந்து உயிர் பெரும். இது கிரேக்கர்களின் நம்பிக்கை. இதன் கண்ணீருக்கு எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றும் வலிமையுண்டாம்.



நம்மூர் கருப்பு போல் சீனர்களின் காவல் தெய்வம் டிராகன். பாம்பு உடலில் கால்களும் இறக்கைகளும் பொருந்திய வித்தியாசமான டிராகன். நமது பிள்ளையார் போன்ற வித்தியாசமான அதே நேரத்தில் குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் உருவம் டிராகன். டிராகன்கள் நல்லது மட்டுமே செய்யும். ஐரோப்பாவிலும் டிராகன்கள் உள்ளன. அவை மோசமான வில்லன்கள்.



'ஸ்பிங்க்ஸ்' என்பது எகிப்தின் கற்பனை வடிவம். சிங்க உடலும் மனிதத்தலையும் கொண்டது. எப்போதும் புதிரோடு காத்துக் கொண்டே இருக்கும். புதிருக்கு சரியான விடையை சொன்னால் புதையல் இருக்கும் பாதைக்கு வழிகாட்டும். தவறாக சொன்னால் மாத்திரை விழுங்குவதை போல் சொன்ன ஆளை வாயில் போட்டு விழுங்கி விடும்.

இந்தியாவில் கூட ஸ்பிங்க்ஸ் தோற்றத்தில் ஒரு படைப்பு உள்ளது. அதன் பெயர் யாளி.


அந்த காலத்தில் கடலில் பயணம் செய்யும் ஆண்கள் திடீரென்று காணமல் போவார்கள். பெரும்பாலும் அது தவறுதலாக கடலில் விழுந்து இறந்ததாக தான் இருக்கும். ஆனால் அதற்கும் ஒரு கற்பனையை யோசித்து உருவம் கொடுத்து விட்டார்கள். அது கடல் கன்னி. ஓர் அழகான ராட்சசி. கப்பலில் வரும் அழகான ஆண்களுக்காக காத்திருக்குமாம். அப்படி யாராவது ஒருவரை பார்த்து விட்டால் பாட்டுப்பாடி, வசியப்படுத்தி கடலுக்கு அடியில் இருக்கும் தங்கள் நாட்டுக்கு கொண்டு பொய் விடுமாம். இந்த கடல் கன்னியின் பாட்டு சம்பந்தப்பட்ட அழகான ஆணைத்தவிர உடன் இருக்கும் மற்றவர்களுக்கு கேட்காதாம்.


கிரேக்கம் மற்றும் லத்தீன் புராணங்களில் வரும் ஒரு கற்பனை வடிவம் யூனிகார்ன். இது ஒரு வெள்ளை குதிரை. நீண்ட பிடரி மயிரும் நெற்றியில் கூர்மையான ஒற்றைக் கொம்பும் இருக்கும். யூனிகார்ன் தனது ஒற்றைக்கொம்பில் எந்த சாதனையையும் சுலபமாக செய்து விடுமாம். இது ஒரு தனிமை விரும்பி. அதனால் அது எப்போதும் மனித மற்றும் விலங்குகள் சஞ்சாரமற்ற தனிமையான பகுதியிலேயே இருக்குமாம்.       

2 comments:

Suresh M said...

I have reading your blog post. It is really kewl and keep up the work.

Kannan said...

அருமையான பகிர்வு.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com