Thursday, August 18, 2011

ரூபாய் குறியீட்டுடன் புதிய நாணயங்கள்


ரூபாய்க்கான புதிய குறியீட்டுடன் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணயக் குறியீட்டை பல நாடுகள் வைத்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009ம் ஆண்டு இந்திய ரூபாய்க்கான நாணய குறியீட்டை உருவாக்க ஒரு போட்டியை வைத்தது.

தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி உதயகுமார் என்பவர், புதிய நாணய குறியீட்டை உருவாக்கினார். இந்த குறியீட்டை ரிசர்வ் வங்கி அங்கீகாரம் செய்து, பரிசும் வழங்கியது. இந்த புதிய குறியீடு தேவநாகரி மொழி எழுத்தில் ‘ர’வையும், ஆங்கில எழுத்தில் Rயும் குறிப்பிடும் படியாக உள்ளது. மேலும், தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களையும் குறிப்பது போல் உள்ளது. தற்போது 1 , 2 , 5 , 10 ரூபாய் நாணயங்களில் இந்த புதிய குறியீடு அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு வந்துள்ளது.

2 comments:

shaan said...

ரூபாய்க்கு புதிய குறியீடு கொடுத்து விட்டால் கஞ்சிக்கு அல்லாடும் ஏழைகளுக்கெல்லாம் சிக்கன் பிரியாணி கிடைத்து விடுமா என்ன? இது தான் இப்ப நாட்டுக்கு அவசியம்னு இதுக்கு ஒரு கமிட்டி வச்சு தேர்ந்தெடுத்தாணுங்க. நாட்டுல இப்ப புழக்கத்துல இருக்கிற ரூபாய் நோட்டுல, 1000 நோட்டுல 4 நோட்டு கள்ள நோட்டுன்னு கண்டுபிடிச்சு இருக்காங்க. 2010ஆம் வருசம் மட்டும் புழக்கத்தில இருந்த கள்ள நோட்டு மதிப்பு 3,200 கோடி ரூபாய். இதனால ரூபாய் மேல உலகத்துக்கு நம்பிக்கையே இல்லாம போக வாய்ப்பு இருக்குன்னு இந்திய உளவுத்துறையே சொல்லியிருக்கு. இதையெல்லாம் என்னன்னு பார்க்கக் காணோம். இந்த புது 2 ரூபாய் காசால தினமும் தலைவலி தான். அதுக்கும் 1 ரூபாய் காசுக்கும் வித்தியாசமே தெரிய மாட்டேங்குது.

Priya said...

நல்ல தகவல்!
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com