Thursday, March 31, 2011

இன்றும் ஒரு தகவல்

 
 
அரவாணிகளிலும் போலிகள்

மனித இனத்தின் மூன்றாவது பாலினம் என்று கூறப்படும் அரவாணிகளுக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சமூக அந்தஸ்து கிடைக்க தொடங்கி உள்ளது. வேலை வாய்ப்பும் தேடி வருகிறது. இவர்களை வடஇந்தியாவில் கின்னர்கள் என்று அழைக்கிறார்கள். அங்கு அவர்களின் நிலை தமிழ்நாட்டை போல இல்லை.

அரவாணிகளுக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன. பல அரவாணிகள் வருமானவரி கட்டி, சொந்த பங்களாவில் குடியிருக்கிறார்கள். அரவாணிகள் அங்கு பணம் கொட்டும் தேவதையாக வலம் வருகிறார்கள். வடஇந்தியாவில் அரவாணிகள் தொட்டால் துலங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. குழந்தை பிறந்த வீட்டில் அரவாணிகள் ஆடிப்பாடி ஆசீர்வாதம் செய்தால் குழந்தையை எந்த நோயும் அண்டாது. ஆரோக்கியமும் கூடும். கடைகளில் கல்லா நிறைய வேண்டும் என்றால் முதல் வியாபாரத்தை அரவாணிகள் ஆரம்பித்து வைக்க வேண்டும். புதுவீடோ, புதுவாகனமோ எதுவாக இருந்தாலும் அதற்கு அரவாணிகள் பூஜை போட்டால்தான் நன்றாக இருக்கும்.

திருவிழா என்றாலே அங்கு வந்து அரவாணிகள் ஆட்டம்போட்டால்தான் பண்டிகை நாட்கள் முழுமையடையும். ஒவொன்றிலும் பணம் ஆயிரக்கணக்கில் வரும். இப்படி பணம் கொட்டுவதால் ஒரிஜினல் அரவாணிகளுடன் அரவாணியாக வேடம் போட்டு கல்லா கட்ட தொடங்கிவிட்டார்கள் 'அல்வா' பார்டிகள்.

வேலைவெட்டி இல்லாத பல ஆண்கள் அரவாணிகள் வேடத்தில் தொழிலில் இறங்கிவிட்டார்கள். மத்தியபிரதேசத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரவாணிகள் உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொய்யர்கள். ஓடும் ரெயிலில் ஏறும் இந்த போலி அரவாணிகள் பயணிகளை மிரட்டியும், மக்களை அடித்தும் பணம் பிடுங்குகிறார்கள். இதனால் ஒட்டுமொத்தமாக அரவாணிகள் பெயர் கெட்டுப்போயிருக்கிறது.

தங்கள் இனத்தை இப்படி அநியாயத்துக்கு கேவலப்படுத்தும் போலி அரவாணிகளை அடையாளம் காண்பதற்காகவே ஒரிஜினல் அரவாணிகள் மத்திய பிரதேசத்தில் ஒரு பறக்கும் படையையே உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் ரெயில், பஸ்ஸில் பயணம் செய்யும் அரவாணிகளை ஒரிஜினலாக இருந்தால் விட்டுவிடுகிறார்கள். போலி என்று தெரிந்தால், அடி வெளுத்துக்கட்டிவிடுவார்கள். இதனால் போலிகளின் நடமாட்டம் குறைந்திருக்கிறது.             

2 comments:

J R Ramesh Babu said...

தெனமும் தினத்தந்தி படிப்பீங்களோ???அதுவும் லேட்-அ படிப்பீங்களோ இது நேத்து நியூஸ், இன்னிக்கு வேறே

உளறுவாயன் said...

நீங்கள் பெங்களூரில் இருக்கீங்க ரமேஷ் தினமும் தினத்தந்தி படிச்சி தெரிஞ்சுக்குவீங்க. ஆனால் வெளிநாட்டில இருகிறவங்களும், தமிழ்நாட்டில இருந்துக்கிட்டே தினத்தந்தி படிக்காதவங்களும் நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு இது புது தகவல். அத லேட்டா தெரிஞ்சிகிட்டாலும் நல்லதுதானே?.