Tuesday, February 22, 2011

'மேரியிடம் ஒரு ஆட்டுக்குட்டி...' பாடல்!

மழலையர் பள்ளிப் பாடல்களில் பிரபலமான ஒன்று, 'மேரியிடம் ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது' ('மேரி ஹாட் எ லிட்டில் லாம்ப்'). 'கோடீஸ் லேடீஸ் மேகஸின்' என்ற பத்திரிகையின் ஆசிரியையாக இருந்தவர் சாரா ஹேல். அவர்தான் 1830-ம் ஆண்டு இப்பாடலை எழுதினார்.

மேரி டைலர் என்ற சிறுமியின் வளர்ப்புப் பிராணியான ஆட்டுக்குட்டி அவளைப் பின்தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதைக் கண்ட சாரா ஹேல் இப்பாட்டை எழுதினார். அக்காலத்தில் வளர்ப்புப் பிராணியை பள்ளிக்குக் கொண்டு செல்வது சட்டதிட்டத்துக்கு எதிரானது.

இப்பாடல் உருவான 50 ஆண்டுகளுக்குப் பின் தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுபிடித்த 'போனோகிராப்'பில் பேசும்போது முதலில் கூறியது இப்பாட்டைத்தான். எடிசன் பதிவு செய்த பிறகு இந்தப் பாட்டு மிகவும் பிரபலமாகி விட்டது.

2 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல தகவல் ..
நன்றி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

//(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...