Saturday, April 8, 2017

கவிதை கேளுங்கள் உணவில் கலந்திடும் ராகம்


கவிதை கேளுங்கள்
உணவில் கலந்திடும் ராகம்
விருந்தை மருந்தெனவே
நினைக்கின்ற சிலபேர்
மருந்தை விருந்தாக
உண்ணுகின்ற சிலபேர்
பூண்டும் வெங்காயமும்
புதுத் தெம்பு ஊட்டிவிடும்
கொழுப்பதிகம் சேராமல்
பொறுப்புடனே பார்த்துக் கொள்ளும்
அவரைக்காய் வெண்டைக்காய்
அன்றாடம் உண்டுவர
சக்கரை நோயென்பது
சடுதியில் மறைந்து போகும்
முருங்கைக்காய் முருங்கைப்பூ
வாரிசு உண்டாக
வகையான துணையாகும்
இஞ்சி எலுமிச்சை தேனோடு தான்கலந்தால்
பித்தம் என்பது
பின்வாங்கி ஓடிவிடும்
சீரகம் நம்முடலை
சீராக வைத்திடும்
மிச்சம்மீதி கொழுப்பதனை
மிளகு விரட்டி விடும்
பழையசாதம் பச்சை மிளகா
சின்னவெங்காயம்
சேர்த்துக் கொள்ள
வயிறு குளிர்ந்துவிடும்
வந்த சூடும் ஓடிவிடும்
கத்திரிக்காய் பாகற்காய்
சுரையுடனே பூசணி புடலை
வாழைக்காய் உருளையும்
வகையோடு சாப்பிட்டால்
வாராது நோயொன்று
வளமான வாழ்வமையும்
முக்கனிகளும் கொய்யாவும்
பப்பாளி திராட்சையும்
தப்பாமல் நாமுண்ண
சிக்கல்கள் ஏதுமின்றி
சிறப்பாக வாழ்ந்திடலாம்......


Download As a PDF

Wednesday, November 2, 2016

No shave November - ஏன் ஃபாலோ பண்றோம் தெரியுமா?


வம்பர் மாதம்னு சொன்னாலே நமக்கு தீபாவளி நினைவுக்கு வரும், சாயங்காலம் ஆனாலே மழை பெய்யும்ங்கிறதுக்கு அடுத்தபடியா நினைவுக்கு வர்ற விஷயம் 'நோ ஷேவ் நவம்பர்'. ஆனால் இதை ஏன் ஆரம்பிச்சாய்ங்க.. எதுக்கு ஆரம்பிச்சாய்ங்கனு புரியாமலேயே பல நவம்பர்களைக் கடந்திருப்போம். இப்போவாச்சும் தெரிஞ்சிக்கலாம் வாங்க...
'நோ ஷேவ் நவம்பர்' ன்னா என்ன?
உலகம் முழுவதிலும் இருக்கும் ஆண்கள் தங்கள் குழுக்களுக்குள் முடிவு செய்து இந்த நவம்பர் மாதம் முழுக்க ஷேவிங் ரேஸரைக் கையில் தொடாமல் இருக்கவேண்டும். சிலர் இதை ஒரு போட்டியாகவும் நடத்தி, இந்த மாதத்தின் முடிவில் தங்கள் குழுவில் யாருக்கு அதிகமாக தாடி வளர்ந்திருக்கிறது எனப் பார்த்து வெற்றியாளரை முடிவு செய்வார்கள்.
எங்கே தொடங்கியது இந்தப் பழக்கம்?
சிகாகோவில் வசித்த சகோதரர்கள் தங்களின் தந்தை 2009-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்ததையொட்டி இந்த ஷேவ் செய்யாமல் இருக்கும் விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்களாம். அப்போது முதல் மெதுவாகப் பரவ ஆரம்பித்த இந்த ட்ரெண்ட் இப்போது பல நாடுகளிலும் காரணம் தெரியாமலேயே பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிறகு இதற்கென ஒரு மாதத்தையும் முடிவு செய்து கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.
எதற்காகத் தொடங்கப்பட்டது?
பலரும் நினைப்பதைப் போல 'நோ ஷேவ் நவம்பர்' என்பது ஆண்கள் ஸ்டைலாக தாடி வளர்த்து ரசித்துக்கொள்வதற்காகவும், கவன ஈர்ப்பிற்காகவும் அல்ல. ப்ரோஸ்டேட் கேன்சர் குறித்த விழிப்புஉணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகத்தானாம். இதன் குறிக்கோள், பொதுவாக ஆண்கள் கட்டிங், ஷேவிங்குக்கு ஒருமாதம் முழுக்கப் பயன்படுத்தும் தொகையைச் சேமித்துவைத்துப் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களுக்கு நன்கொடையாக அளிப்பதற்குத்தான். புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் சிறிதுசிறிதாக முடியை இழக்கத் தொடங்குவார்கள். அதைக் கனெக்ட் செய்யும்விதமாகவே புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக ஷேவ் செய்யாமல், முடி வெட்டாமல் இருப்பது கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், பலர் இதன் உண்மையான நோக்கத்தை அறியாமல் விளையாட்டாக ஹேஷ்டேக்கோடு போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து மகிழ்கிறார்கள்.
நாம் என்ன செய்யலாம்?
'நோ ஷேவ் நவம்பர்' யுத்திக்காக தாடியோடு இருக்கும் போட்டோவை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றி லைக்ஸ் வருதான்னு குத்தவெச்சு எண்ணிக் கொண்டிருக்காமல், நம்மால் முடிந்தவரை பலவகைப் புற்றுநோய்களைப் பற்றிப் பொதுமக்களிடத்தில் விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தலாம்.Download As a PDF

Thursday, March 31, 2016

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்.


மழை வந்தபோதும்.. வெயில் அடித்த போதும்.. புயல் வீசியபோதும்... மறக்க முடியாத நபர் ரமணன்!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர் ரமணன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்.
வானிலை என்றால் தமிழர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் ரமணன் என்றால் மிகையல்ல, ஒருசிலரைத் தவிர பெரும்பாலும் திரைப் பிரபலங்களைப் போல, அரசு ஊழியர்கள் யாரும் ஊடகங்களிலோ, மக்கள் மத்தியிலோ பிரபலமடைவது இல்லை. ஆனால், அவர்களில் இருந்து விதிவிலக்காக மழை என்றாலும், வெயில் என்றாலும் உடனே மக்களின் நினைவுக்கு வருபவராக, மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இந்த ரமணன்.
பள்ளி கல்லூரிகளில் அதிகம் கிண்டலுக்கு ஆளனவரும் இவர்தான். ஆனால் சென்னையை புரட்டி போட்ட வெள்ளத்தை முன்கூட்டியே சரியா கணித்து எச்சரிக்கை விடுத்தவரும் ரமணன் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான பணியை வானிலை மையத்துக்கு வழங்கி அடுத்தகட்டமாக மேலும் சிறப்பான பணிகள் செய்ய காத்திருக்கும் ரமணன் அவர்களுக்கு வாழ்த்துகள்


Download As a PDF

Thursday, March 24, 2016

ஹோலி பண்டிகையின் வரலாறு


ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து, நிறைந்த மனத்துடன் இதை கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.

கிருஷ்ண பகவான் தன் குழந்தை பருவத்திலும், பால்ய பருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.

ஹோலி பண்டிகையின் வரலாறு 

இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன், அதை எதிர்த்தான். பிரகலாதன் மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். 

ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.

வண்ணமயமான ஹோலி  நல் வாழ்த்துகள்Download As a PDF

Tuesday, March 8, 2016

மகளிர் தின வாழ்த்துகள்...


பெண்!!!

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்துஉடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.

“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.

அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.

“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.

“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………கடவுள் சிம்பிளாக பதிலளித்தார். 


Download As a PDF

Tuesday, September 22, 2015

நெடும் தொடர்கள் சொல்லும் செய்தியென்ன....

நெடும் தொடர்கள் சொல்லும் செய்தியென்ன....என்கிற கேள்விகளுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த பதில்கள் இவை.

1).அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது?
2).அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது?
3).மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது?
4).மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது?
5).பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு
செய்வது?
6).எந்த தவறை எப்படி மறைப்பது?
7).அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது?
8).மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது?
9).கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது?
10).மனைவியை எப்படி அடிமை படுத்துவது?
11). எப்படி பழிக்குபழி வாங்கலாம்?
12).ஆபாசமாக பேசுவது எப்படி?

எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய் கொலை, கொள்ளை,
ஏமாற்றம், அபகரிப்பு, ஆள் கடத்தல்,வன்முறை, வஞ்சகம்,
கள்ள காதல் ,விபச்சாரம்,அநியாயம்,அக்கிரமம்,பொய்,திருட்டு என
இப்படி எல்லாவற்றையும் ஈவிரக்கமில்லாமல் அழகாகவும் , தெளிவாகவும் காட்சிப்படுத்தலோடு சொல்லி அதை கற்றும் தருவதுதான் பெரும்பாலான நெடும் தொடர்களின் மறைமுக நோக்கமாக தெரிகிறது.

காலையில் இருந்து இரவு 11 மணிவரை இந்த நெடும் தொடர்களுக்கு அடிமையாக பலர் இருக்கிறார்கள் குறிப்பாக "பெண்கள்" குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு 70 % காரணம் இவை என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள் .

பொழுதுபோக்கு என்ற பெயரில் "எதை"வேண்டுமானாலும் பார்ப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்பதுதான் உண்மை!

நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும்தான் ஒரு சிறந்த சமூகத்திற்கான அடையாளம்.

தீமைகளையும்,பாவங்களையும் ரசிப்புக்குரியவையாக நாம் பார்ப்பது அழிவுக்கே வழி வகுக்கும். எனவே நெடும்தொடர் தயாரிப்பாளர்களும், ஒளி பரப்பாளர்களும் சமூகப் பிரக்ஞையோடு சிந்தித்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டிஎழுப்பவல்ல நெடும் தொடர்களை தயாரித்து ஒளிபரப்புவதே நல்ல மானுடத்திற்கு அழகாகும்.

மக்களும் இதனால் வரும் தீமைகளை புரிந்து கொண்டு இது போன்ற நெடும்தொடர்களைப் புறக்கணித்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
சிறந்த சமூகத்தை உருவாக்குவதே நல்ல மனிதனுக்கு அழகாகும்..


Download As a PDF

மனைவி அமைவதெல்லாம்...


லகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.

ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான். 
அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும் கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே 
அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்? 
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம். இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! 

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”

என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.
நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர் 
மனைவியின் பிரிவைத் தாளாமல் 

"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" 

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.
அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா..!!
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். 

அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.  

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில்.


Download As a PDF

Wednesday, September 16, 2015

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்...


ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். 

ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .

வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது.

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். 
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். 

ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான். 

உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும். 

சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான். 

களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 

இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 

கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும். 
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.

ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும். 
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்.

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும். 

அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான். 

மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.

கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.

பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை. 

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.


Download As a PDF

Friday, September 11, 2015

சிகாகோவில் விவேகானந்தர் எழுச்சியூட்டும் உரை நிகழ்த்திய தினம் இன்று


அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் எழுச்சியூட்டும் உரையை விவேகானந்தர்  இன்று தான் 1893-ல் நிகழ்த்தினார். வழிகாட்டும் அவரின் உன்னத வாசகங்கள் இவை

* வாய்மை எந்தச் சமூகத்துக்கும் மரியாதை செலுத்துவதில்லை. வாய்மையைச் சமூகம் மதிக்க வேண்டும். இல்லையேல் அந்தச் சமூகம் அழிந்துபோகும்.

* இளம் நண்பர்களே! வலிமையோடு இருங்கள் என்பதே என் அறிவுரை. நீங்கள் பகவத் கீதை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும். இவை தைரியமிகுந்த வார்த்தைகள்; இருந்தாலும் உங்களை நேசிப்பதால் இதனைச் சொல்கிறேன். ... தோள்களின் வலிமை கூட்டுங்கள். தசைகளை மேலும் உறுதிப்படுத்துங்கள். 

* முரடர்களை எதிர்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கைக்கான பாடம். கடுமையனவற்றைத் தீரத்தோடு எதிர்கொள்ளுங்கள். குரங்குகளைப் போல வாழ்க்கையின் துயரங்கள் நாம் அஞ்சி ஓடாத பொழுது பின்னோக்கி செல்லும். 

* ஒரு சிந்தனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள். அதைப்பற்றிக் கனவு காணுங்கள், அதனோடு வாழுங்கள். உங்கள் மூளை, தசை,நரம்பு, எல்லாப் பாகங்களும் அந்தச் சிந்தனையால் நிரம்பி வழியட்டும். இதுவே வெற்றிக்கான வழி. 

* உயர்ந்த பொருட்கள் உங்கள் காலடியில் உள்ளன, ஏனெனில், நீங்கள் தேவலோக நட்சத்திரங்கள். எல்லாம் உங்கள் காலடியில் உள்ளன. உங்களில் கைகளில் அள்ளி விண்மீன்களை நீங்கள் விரும்பினால் விழுங்க முடியும். இதுவே உங்களின் உண்மையான பண்பு. வலிமையோடு இருங்கள். எல்லா மூடநம்பிக்கைகளையும் கடந்து விடுதலையுற்று இருங்கள். 

* நாம் 'என்னைத் தீண்டாதே' என்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய மதம் சமையலறையில் இருக்கிறது. நம்முடைய கடவுள் சமையல் சட்டியில் இருக்கிறார், நம்முடைய மதம்,'நான் புனிதமானவன், என்னைத் தீண்டாதே' என்பதாக இருக்கிறது. இது இன்னுமொரு நூறு ஆண்டுகாலம் தொடர்ந்தால் நாம் எல்லாரும் பைத்தியக்கார விடுதியில் தான் இருப்போம். 

* எல்லா விரிவடைதலும் வாழ்க்கை. சுருங்கிக்கொள்ளுவது எல்லாம் மரணம். எல்லா அன்பும் விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிக்கொள்ளுதல். இதுவே வாழ்க்கையின் ஒரே சட்டமாகும். அன்பு செய்கிறவர் வாழ்கிறார், சுயநலத்தோடு இருப்பவன் இறக்கிறான். அன்புக்காக அன்பு செய்யுங்கள், அதுவே வாழ்க்கையின் ஒரே சட்டம் என்பதற்காக அன்பு செய்யுங்கள். சுவாசிப்பதற்காக அன்பு செய்யுங்கள். இதுவே சுயநலமற்ற அன்பு, செயல் அனைத்துக்குமான ரகசியமாகும். 

* ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை, செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை, மறந்து விடாதீர்கள். அவர்களும் ரத்தமமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள். வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். பெருமையோடு, 'நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!' என்று ஆராவரியுங்கள். 

* நீங்கள் சுயநலம் அற்றவரா என்பதே இப்போதைய கேள்வி. ஆமாம் என்றால் எந்த ஒரு மதப்புத்தகத்தையும் படிக்காமலேயே, எந்த ஒரு தேவாலயத்திற்குள்ளோ கோயிலுக்குள்ளோ போகாமலேயே நீங்கள் முழுமையானவர் ஆகிறீர்கள். 

* கோடிக்கணக்கான மக்கள் பசியிலும், அறியாமையிலும் உழல்கிற பொழுது அவர்களின் நசிவில் கற்றுவிட்டு அவர்களின் குறைகளுக்குச் செவிமடுக்காமல் இருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் தேசத்துரோகியாகவே கருதுவேன். 

* வெற்றி பெற உங்களுக்கு அளவில்லாத உத்வேகமும், முனைப்பும் இருக்க வேண்டும். "நான் பெருங்கடலைப் பருகுவேன்' என்று உத்வேகம் மிகுந்த ஆன்மா கூறவேண்டும்; "என் விருப்பத்தில் மலைகள் பொடிப்பொடியாகும்!' அப்படியொரு ஆற்றலோடு இருங்கள்; அப்படியொரு முனைப்போடு முன்னேறுங்கள். ஓயாமல் உழையுங்கள், உங்களின் இலக்கை அடைவீர்கள்.


* பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போராட்டங்களை எதிர்கொள்ள உதவாத கல்வி, அவர்களின் பண்பின் ஆற்றலை வெளிப்படுத்தாத கல்வி, வாரிக்கொடுக்கும் தயாள உள்ளத்தைத் தராத கல்வி, சிங்கத்தின் தீரத்தை தராத கல்வி - கல்வி எனப்படும் தகுதியுடையது அல்ல. தன்னுடைய சொந்தக் கால்களில் ஒருவன் நிற்கச் செய்வதே உண்மையான கல்வியாகும். 

* யாரையும் நிந்தனை செய்யாதீர்கள். உங்களால் முடியுமென்றால் உதவிக்கரம் நீட்டுங்கள். இல்லை என்றால், கைகளைக் கூப்பி உங்கள் சகோதரர்களை வாழ்த்தி அவர்களின் பாதையில் அவர்களைச் செல்ல அனுமதியுங்கள்.

* கோழையும், மூடனுமே 'இது என்னுடைய விதி' என நொந்து கொள்வார்கள். ஆனால், வலிமை மிகுந்தவன் எழுந்து நின்று 'என் விதியை நான் தீர்மானிப்பேன்' என்பான். வயதாகிக்கொண்டிருப்பவர்கள் தான் விதியைப் பற்றிப் பேசுவார்கள். இளைஞர்கள் ஜோதிடத்தை நோக்கி செல்வதில்லை. 

* கண்மூடித்தனமாக எதையும் நம்புவது ஆன்மாவை அழிப்பதாகும். நீங்கள் நாத்திகவாதியாகக் கூட இருங்கள், ஆனால், எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். 


Download As a PDF

Wednesday, August 19, 2015

நிஜத்தின் பிரதிபலிப்பு !புகைப்படம் என்பது வெறும் படம் அல்ல. அது ஒரு 'கலை'. புகைப்படம் நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது.

‘ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு செய்தியை ஒரு புகைப்படம் சொல்லும்’ என்ற வாசகமே புகைப்படத்தின் சிறப்பை சொல்லும்.

புகைப்‘படம்’ பிடிக்காதவர்களே இன்று கிடையாது. ஒரு காலத்தில் யாராவது படம் எடுக்க வருகிறார்கள் என்றால் மக்கள் ஓட்டம் பிடித்த காலம் உண்டு. போட்டோ பிடித்தால் ஆயள் குறைந்துவிடும் என்ற ‘நம்பிக்கையும்’ இருந்தது. அதே நேரத்தில் 3 புகைப்பட பிரதிகள் தருவதற்கு முன்பு தரும் ’புரூப் காப்பி’க்காக காத்திருந்த காலங்கள் உண்டு. அது ஸ்டூடியோக்காரர்களின் காலம். அப்படியே அங்கிருந்து போட்டோ கடை(ஸ்டூடியோ அல்ல)க்கு சென்று சட்டம் போட்டு வாங்குவார்கள். அவர்கள் 2, 3 நாட்கள் அலைய விடுவார்கள்.

வாங்கி வந்து வீட்டில் மாட்டிய பிறகு தான் நிம்மதி. குடிசையாக இருந்தாலும் வீட்டுக்கு 4 படம் சுவற்றில் தொங்கும், அரிய பொருளாக பார்க்கப்பட்ட கேமராக்கள், டிஜிட்டல் மயமான பிறகு பல ஸ்டூடியோக்களும் காணாமல் போய் விட்டன.

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது இன்றைய சூழலில் எளிதாகி விட்டது. புகைப்படத்தின், தரம், வேகம், துாரம் என அனைத்து விதங்களிலும் முன்னேற்றமடைந்து விட்டது. செல்போன் வந்த பிறகு நின்றால், உட்கார்ந்தால், நடந்தால் மகிழ்ச்சியில், துயரத்தில் என எல்லா நிகழ்வுகளிலும் தினசரி படங்கள் எடுப்பது அதிகரித்துவிட்டது. குழந்தைகள் கூட புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன.

இன்று புகைப்படங்கள் வெறும் நினைவு சின்னம் மட்டுமல்ல உலகின் வரலாற்றை திருப்பிப் போட்டிருக்கிறது. இன படுகொலைகளை, அடிமைகள் படும் அல்லல்கள், அரசியல் அத்துமீறல்கள், சாதி வெறியாட்டங்கள், அதிகார அட்டகாசங்கள், இயற்கை சீரழிவுகள் என எல்லாவற்றையும் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியிலுமே நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். கேமராவால் இன்று பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. Selfie என்ற பெயரில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. எனவே கேமராவை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


Download As a PDF